வரும் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் சங்ககிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியமும் குறித்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நாகையில் மீனவர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி படகு பேரணி நடைபெற்றது. அப்போது, 100 சதவீதம் தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற பதாகை மற்றும் தேர்தல் ஆணையத்தின் முத்திரை பதாகைகளை கையில் பிடித்தபடி மீனவர்கள் படகில் அணிவகுத்து சென்றனர். தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாரிகளிடம் தேர்தல் விழிப்புணர்வு பிரசுரங்களை ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் வழங்கி, தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், 'அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம்' என்ற வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் பறக்கவிட்டார். தொடர்ந்து அங்கிருந்த வியாபாரிகள், பயணிகள் ஆகியோரிடம்  வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

Night
Day